பஜாஜ் பிளாட்டினா 100 



பஜாஜ் நிறுவனத்தின் பிளாட்டினா 100 பைக் மொடலுக்கு எப்பொழுதும் கணிசமான வரவேற்பு இருக்கிறது. இது புதிய வாகன விதிகளுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.


அப்டேட் செய்யப்பட்ட எஞ்சினை தவிர்த்து, புதிய பிளாட்டினா 100 பைக், முந்தைய மொடலைக் காட்டிலும் பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களை பெற்றுள்ளது. புதிய ரக டின்டட் விண்ட்ஸ்கிரீன், எல்.இ.டி ரக முகப்பு விளக்குகள், சிறப்பான தோற்றம் கொண்ட ஃபேசியா போன்ற அம்சங்கள் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளது.



11.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்ற இந்த பைக்கில் இரு டயர்களிலும் டிரம் பிரேக் கொண்டு சிபிஎஸ் ஒப்ஷன் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த பைக் ‘ComforTec’ டெக்னாலஜிகளுடன் தொடர்ந்து வருவதுடன், நீளமான முன்புற மற்றும் பின்புற சஸ்பென்சன்களை கொண்டிருக்கும். இந்த அம்சங்கள் அனைத்தும் இதை ஓட்டுபவர் மற்றும் பயணிப்பவர்களுக்கு சௌகரியமான பயண அனுபவத்தை கொடுக்கும்.



பிளாட்டினா மொடல் பைக்குகள் சிறப்பான மைலேஜை வழங்கும் என்று பஜாஜ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கேற்றவாறு இந்த பைக் லிட்டருக்கு 90 கி.மீ மைலேஜ் வழங்கும் என பஜாஜ் தெரிவித்துள்ளது. இந்த பைக்கின் மொத்த எரிவாயு கொள்ளவு 11 லிட்டர் ஆகும். இதன்மூலம் அதிகப்பட்சமாக 990 கி.மீ வரை பயணம் செய்யலாம்.


பைக்கின் முன்பக்கத்தில் 135 மிமீ கொண்ட டெலஸ்கோப் சஸ்பென்ஷன் மற்றும் பின்பக்கத்தில் 110 மிமீ டிராவல் கொண்ட எஸ்என்எஸ் வழங்கப்பட்டுள்ளது மேலும் முன்பக்க சக்கரத்தில் 130 மிமீ டிரம் பிரேக், பின்பக்கத்தில் 110 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளன. வாகனத்தின் முக்கிய பாதுகாப்பு அம்சமாக சிபிஎஸ் பிரேக்கிங் அமைப்பு விளங்குகிறது.



இந்த பைக்கில் எயர் கூலர் மற்றும் சிங்கிள் சிலிண்டர், ஃப்யூவெல் இஞ்ஜெக்டட் 102 சிசி எஞ்சின் உள்ளது. இது 7.5 பிஎச்பி பவர் மற்றும் 8.3 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும். மேலும், இந்த பைக்கில் 4 ஸ்பீட் கியர்பாக்ஸ் கூட்டாக அமைத்துள்ளதுஎ எலக்ட்ரிக்ஸ்டார்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாக் மற்றும் வைன் நிறங்களில் இந்த பைக் விற்பனையில் கிடைக்கிறது


நாட்டில் விற்பனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களில் பஜாஜ் பிளாட்டினா 100 மொடல் முன்னணி பைக்காக திகழ்கிறது. அதுமட்டுமன்றி புதிய பஜாஜ் பிளாட்டினா பைக் நல்ல தோற்றம் மற்றும் சிறப்பான செயல்திறன் அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. முந்தைய வெர்ஷனை போலவே இந்த பைக்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.



பஜாஜ் பிளாட்டினா 100 பற்றிய மேலதிக விபரங்கள் பின்வருமாறு.












Post a Comment

Previous Post Next Post

starclick add