ரோயல் என்ஃபீல்ட் ஹிமாலயன்


இமையமலை பயணத்திற்கென முக்கியமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஹிமாலயன் பைக்குகள் தற்போது புதிய அம்சங்களை கொண்டு விற்பனைக்கு களமிறங்கியுள்ளது.

அதன்படி, பிஎஸ்6 ஹிமாலயன் மோட்டர் சைக்கிள் ஏற்கனவே இருந்து வந்த நிறங்களுடன்  கிரே,  ப்ளூ மற்றும்  ரெட் ஆகிய மூன்று புதிய நிறத் தேர்வுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. முன்னதாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஹிமாலயன் மொடல் பிளாக்,  கிரே மற்றும் வயிட் நிறத் தேர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.

ஹிமாலயன் பைக்குகள் புதிய சிறப்பம்சங்கள், நிறத் தேர்வுகள் மற்றும் பல்வேறு அப்டேட்டுகளுடன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
ரோயல் என்பீல்ட் நிறுவனம் பல மொடல்களில் தங்கள் பைக்குகளை விற்பனைக்கு களமிறங்கியுள்ளது, அதில் ஹிமாலயன் மிக முக்கியமானதாகும். தற்போதைய ஹிமாலயன் மொடலில் இருக்கும் 411சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 24.5 பிஎச்பி பவரையும், 32 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது மேலும் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பைக்கில் மற்ற ரோயல் என்ஃபீல்ட் பைக்குகளில் உள்ள வைப்ரேஷன்கள் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது. இதில் 21 இன்ச் முன் மற்றும் 17 இன்ச் பின் பக்க டயர்கள் , பொருத்தப்பட்டுள்ளன.

மாசு கட்டுப்படுத்தும் பி.எஸ்.6 ரக வசதியை இந்த புதிய மொடல் கொண்டுள்ளது. இதில், ஒரே நேரத்தில் அனைத்து லைட்களும் எரியும் வண்ணம் புதிய சுவிட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகள் தற்காலத்திற்கு ஏற்றத்தாவும், மிகவும் பிடித்ததாகவும் உருவாகியுள்ளது. 

சியட் நிறுவனத்தால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட டயர்களுடன் 21 இன்ச் ஸ்பொக்ஸ் வீல்களை முன்புறமும், 18 இன்ச் ஸ்பொக்ஸ் வீல்களை பின்புறமும் கொண்டுள்ளது.

ஹிமலயான் தற்போது 182கிலோ எடையுடன் 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இருக்கை உயரம் முடிந்த அளவுக்கு 800 மிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஐரோப்பிய மார்க்கெட்டிற்கு ஏற்றாற் போல யுரோ IV எமிசன் கன்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் ஆகியவை ஸ்டாண்டர்ட் அம்சமாக இடம்பெற்றுள்ளது.

முன்னதாக பிஎஸ்-4 வெர்ஷன் ஹிமாலயன் பைக்கில் 24 பிஎச்பி பவர் மற்றும் 32 என்.எம் டார்க் திறன் இருந்தது. அதற்கான எஞ்சின் 411 சிசி சிங்கிள் சிலிண்டர் எயார் கூலர் அம்சங்களை பெற்றிருந்தது

மேற்கூறப்பட்ட சிறப்பம்சங்களை கடந்து, புதிய பிஎஸ்6 ரோயல் என்ஃபீல் எட் ஹிமாலயன் பைக்கில் வேறு எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்த பைக்கின் மெக்கானிக்கல் அம்சங்கள், பழைய மொடலை பின்பற்றியே அமைக்கப்பட்டுள்ளன.

ரோயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் பற்றிய மேலதிக விபரங்கள் பின்வருமாறு.










1 Comments

Post a Comment

Previous Post Next Post

starclick add