பஜாஜ் சி டி 100



நடுத்தர மக்களுக்கும் மிகவும் பயனளிக்கும் இருசக்கர வாகனம் என்ற பெருமையை பெற்ற தயாரிப்புகளில் பிரதானமானவை பஜாஜ் சிடி100 ஆகும்.

எளிமையான பரமாரிப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றை பெற்றுள்ள இந்த பைக்கிற்கு வரவேற்பு எப்போதும் உள்ளது. தற்போது இந்த பைக்குகள் பிஎஸ்-6 விதிகளுக்கு இணங்க அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது முதல் பிஎஸ் 6 இணக்கமான மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது, பஜாஜ் சிடி 100 சிசி மற்றும் 110 சிசி எச்-கியர் ஆகிய வகைகளிலும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.




பஜாஜ் மோட்டார் சைக்கிள் நிறுவன தலைவர் சாரங் கனடே, குறிப்பிடுகையில்

" புதிய மாடல்கள் பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம், தங்கள் வாகனங்களை, பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்டதாக மாற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது எங்கள் நிறுவனத்தின் பிஎஸ்6 மாடல் அப்டேட் செய்யப்பட்ட பைக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. எங்கள் உலக தரம் வாய்ந்த ஆய்வு குழுவினரின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளியாகியுள்ள சிடி மற்றும் பிளாட்டினா மாடல்கள் பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்களுக்காக வாடிக்கையாளர்கள் தங்கள் செலவிடும் பணத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று உறுதியாக தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.


குறைந்த விலை பஜாஜின் சிடி 100 பைக்கில் ஸ்போக் வீல் , அலாய் வீல் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் என மொத்தமாக மூன்று வகைகளில் கிடைக்கின்றது. இந்த பைக்கில் எலக்ட்ரிக் ஸ்டார்ட் பெற்ற மொடல் 102. இது சிசி என்ஜினை கொண்டுள்ளது.



மணிக்கு 90 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட இந்த பைக்குகளில், முன்புறத்தில் 125 மிமீ டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனுடன் 110மிமீ பிரேக்கினை டயரில் பெற்றுள்ளது,

 பின்புறத்தில் 100மிமீ பயணிக்கும் திறன் பெற்ற SNS ட்வின் சாக் அப்சார்பருடன் , டயரில் 110மிமீ பிரேக்கினை கொண்டதாக விளங்குகின்றது.

பஜாஜ் சி.டி 100, 102 சிசி பைக்கில் சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூலர் கொண்டுள்ளது. மேலும் இந்த மோட்டார் சைக்கிளில் 7500 ஆர்பிஎம்மில் 7.5 பிஹெச்பி மற்றும் 5500 ஆர்பிஎம்மில் 8.24 என்எம் உச்ச முறுக்கு விசையை வெளியேற்றும். இரண்டு பைக்குகளும் இப்போது எலக்ட்ரானிக் இன்ஜெக்ஷன் அமைப்பைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



ரெட் மற்றும் பிளாக் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கும் பஜாஜ் சிடி100 முத்நைய மொடல்களை போன்றே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய மொடல்களில் இருந்து வித்தியாசப்படுத்தும் நோக்கில் சிடி100 மொடலுக்கு பஜாஜ் நிறுவனம் 
 ஃபியூயல் காஜ், ஃப்ளெக்சிபிள் சைடு இன்டிகேட்டர்களை கொண்டு புதிய பைக்குகளின் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


பஜாஜ் சி டி 100 பற்றிய மேலதிக விபரங்கள் பின்வருமாறு.













Post a Comment

Previous Post Next Post

starclick add