Pulsar RS200


பஜாஜ் ஆட்டோ நிறுவனம், 2001 முதல், பல்சர் வகை பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. 135 சிசி, 150 சிசி, 180 சிசி, 200 சிசி யை தொடர்ந்து ஆர்எஸ் 200 பைக்கை வெளியிட்டது. 
 
இளைஞர்களுக்கு அதிவேக பயணத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்த பைக் அமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது..

 நகரப்பகுதியில், லிட்டருக்கு, 32.8 கி.மீற்றர், மற்றும் நெடுஞ்சாலைகளில், 44.9 கி.மீற்றர், மைலேஜ் தரும் எனவும் பஜாஜ் நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட பல்சர் ஆர்எஸ்200 பைக்குகள்
ஆடம்பரமான  தோற்றமளிக்கிறது.


வெள்ளை நிறம் பிரதானமாக இடம்பெற்றிருக்க, அதில் சிவப்பு நிறத்திலான டிசைன் பட்டைகள் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதோடு பைக்கின் மற்றைய பகுதிகளில் கருப்பு நிறம் பிரதானமாக இடம்பெற்றிருக்கிறது.

வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய மூன்று நிற கலவையில் இந்த பஜாஜ் பல்சர் ஆர்.எஸ் 200 பைக் பார்க்க கம்பீரமாகவும் கவர்ச்சியாகவும் உள்ளது.

ஆர்.எஸ் 200 பைக் சிவப்பு நிறம் தவிர நீலம், கருப்பு மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.


தோற்றப்பொலிவில் மெருக்கூட்டப்பட்டடுள்ளதே தவிர, எஞ்சின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை..

பைக்கின் மொத்த எடை, 151 கிலோ. 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

விற்பனையில் கிடைக்கின்ற மொடலில் உள்ள அதே 199.5 சிசி  லிக்விட் கூலர் , என்ஜின் பெற்று அதிகபட்சமாக 24.1hp பவரை 9,750rpm-ல் வழங்குகிறது, மற்றும் 18.6Nm டார்க்கினை 8,000rpm மூலம் வழங்குகின்றது.

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள்  சஸ்பென்ஷன் அமைப்பு, பின்புறத்தில் நைட்ராக்ஸ் மோனோ சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது.

அதேபோல இந்த பைக்கின் முன்பக்க சக்கரத்தில் 300 மி.மீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க சக்கரத்தில் 230 மி.மீ டிஸ்க் பிரேக் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. தவிர ஆர்.எல்.பி சென்சாருடன் கூடிய சிங்கிள் சேனல் ஏபிஎஸ் முன்பக்க சக்கரத்தில் இடம்பெற்றுள்ளது.


இதுதவிர மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.  முந்தைய மொடல்களை போன்றே  ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், பார்ட்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்.இ.டி. டெயில் லேம்ப் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.

Pulsar RS200 பற்றிய மேலதிக விபரங்கள் பின்வருமாறு.












3 Comments

Post a Comment

Previous Post Next Post

starclick add