Honda CBR 400



Honda CBR 400 R பைக்குகள் ஸ்டைலாக இருப்பதுடன் முழு வேகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 
 இந்த பைக்கை முதன்முதலில் 1983 இல் honda நிறுவனம்   வெளியிட்டது. இது பார்ப்பதற்கு ஸ்போர்ட்ஸ்  பைக்  போலிருந்தது.  பழைய 400 RR பைக்கில் 4 இன்ஜின் இருந்தது, மேலும் மணிக்கு 195 கிமீ வேகத்தில் செல்லலாம்.

சர்வதேச சந்தையில் Honda வின் அடுத்த பைக்கான CBR400R அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் அமைப்பானது honda வின் மற்றோரு பைக்கான CBR500R 
 பைக்கின் body வடிவமைப்பு போன்றே இருந்தாலும், இதில் கூடுதலாக கலர் ஸ்கீம்கள் உள்ளன.
மேலும் இந்த பைக் 250 ஆர்ஆரை அடிப்படையாகக் கொண்டது. 
 (அதன் கூர்மையான ஸ்டைலை சிபிஆர் 250 ஆர்ஆரிடமிருந்து பெறுகிறது )


சந்தையில் உள்ள சிபிஆர்400ஆர் பைக்கின் டிசைன் அம்சம் பெரும்பாலான பாகங்கள் CBR500R மொடலில் இருந்து பெறப்பட்டு முழுமையான எல்இடி லைட்டிங்கை கொண்டு 2019 ஆம் ஆண்டில் ஹோண்டா CBR400R பைக்கள், சிவப்பு, வெள்ளை மற்றும் கிரே மெட்டாலிக் ஆகிய நிறங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டது. இந்த மொடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் கொண்டுள்ளது.

சிபிஆர் 400 பைக் மாடலில் 3 வகையான பைக் கிடைக்கும். அவை சிபிஆர் 400ஆர், சிபிஆர் 400எஃப், சிபிஆர் 400எக்ஸ் ஆகும்.


மிக நேர்த்தியான வடிவமைப்பை கொண்டுள்ள இந்த பைக்கில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 399சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 46bhp திறனையும் மற்றும் 38Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றது.

மேலும், இந்த பைக்கில் 17 லிட்டர் பெட்ரோல் பிடிக்கும் அளவிற்கு டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. 192 கிலோ எடையுள்ள, இந்த பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 41 கிலோமீட்டர் தரும் திறனை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Honda CBR 400R பைக்களில் கூடுதலாக புதிய ரைடிங் பொசிஷன்களை ரேஸ் பைக்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கையில், CBR400R பைக்கள் ஸ்டைலாக இருப்பதுடன் முழு வேகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஸ்போர்ட்ஸ் பைக்களுக்கான முற்றிலும் புதிய LED லைட்டிங் பொருத்தப்பட்டுள்ளது.
சஸ்பென்சன்களை பொறுத்தவரை, இதில் டெலிஸ்கோபிக் போர்க் மற்றும் மோனோஷாக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்களில் சிங்கிள் டிஸ்க் பிரேக்களை முன்புறம் மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் முன்புற டயர்கள் 120/70-17 மற்றும் ரியர் பகுதியில் 160/60-17 அளவில் இருக்கும். மேலும் இந்த பைக்களின் பெட்ரோல் செலவிடும் திறன் 41kpl-ஆகும்.


Honda CBR 400 பற்றிய மேலதிக தகவல்கள் பின்வருமாறு.








Post a Comment

Previous Post Next Post

starclick add