BAJAJ CHETAK



மக்களின் மனங்களை வென்ற பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) மிக மிக நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் முற்றிலும்  எலெக்ட்ரிக் கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்த பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்  ஜனவரி 14 முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இந்த ஸ்கூட்டர், அர்பேன் மற்றும் பிரீமியம் என இருவித வேரியண்களில் கிடைக்கிறது.

இம்முறை எரிபொருளால் இயங்கும் வாகனமாக அல்லாமல் மின்சார ஸ்கூட்டராக அறிமுகப்படுத்தியது. எனவே இந்த ஸ்கூட்டர் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.


முதற்கட்டமாக இந்த ஸ்கூட்டர் பூனே மற்றும் பெங்களூரில் கிடைக்கும். அந்த வகையில் பெங்களூரில் 14 விற்பனை நிலையங்களிலும்,  பூனேவில் 4 விற்பனை நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதன்பின் மற்ற பகுதிகளில் விற்பனைக்கு வருகிறது. செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் கே.டி.எம். விற்பனையகங்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



பழமை, புதுமையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ள புதிய பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான அறிமுக விழாவில் பங்கேற்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் குழுமத் தலைவர் ராஜீவ் உரையாற்றியபோது , 50 ஆயிரம் கி.மீ வரை 3 வருட வாரண்டி மற்றும் 3 இலவச சர்வீஸ் வழங்கப்படுகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2 டிரைவிங் முறைகள் உள்ளன - எக்கோ மற்றும் ஸ்போர்ட். டேட்டா பகிர்வு, பாதுகாப்பு மற்றும் பயனர் அங்கீகாரம் போன்றவை இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களாகும்.

மேலும் இந்த ஸ்கூட்டரில் உள்ள 3kWH பேட்டரி உள்ளது. இது 15 கி.மீ டார்க் திறனை வழங்க வல்லது. வெறும் 5 மணிநேரங்களில் இந்த பேட்டரி முழுமையாக சார்ஜாகி விடும். ஒரு மணிநேரத்தில் 25 சதவீதம் வரை இந்த பேட்டரி சார்ஜாகும்.

மேலும் இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 95 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த மோட்டார் IP67 தரச்சான்று பெற்ற லித்தியம் அயன் பேட்டரியில் இருந்து தேவையான மின்சக்தியை எடுத்துக் கொள்கிறது. .இதன் மொத்த எடை 120 கிலோ.

பிளாஸ்டிக் பாகங்களுக்கு பதிலாக மெட்டல் பாகங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஸ்கூட்டர் என்ற பெருமையும் இதற்கு உள்ளது. மேலும் ரெட்ரோ டிசைன் கொண்ட இந்த ஸ்கூட்டரில் வட்ட வடிவிலான முகப்பு விளக்குகள், அலாய் சக்கரங்கள், சிங்கிள்-சைடு சஸ்பென்ஷன் அமைப்பு போன்றவை உள்ளது.


செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் ப்ளூடூத் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. 
இந்த ஸ்கூட்டருக்கு என்று பிரத்யேகமான செயலியை உருவாக்கியுள்ளது பஜாஜ். அதை வைத்து பேட்டரி திறன், செல்லும் இடம், ரேஞ்ச் உள்ளிட்ட தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம். மேலும் இந்த பைக்கில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் அமைப்பு உள்ளது.

செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்புறம் சிங்கில் ஆர்ம் யூனிட், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

அர்பைன் மொடல்:
ரஷ் மற்றும்  வைட் என இரண்டு நிறங்களிலும்,

 பிரீமியம் மொடல்: ஹேசல்நட்,  பிளாக், சிட்ரஸ் ரஷ், வெலுட்டோ ரோஸோ மற்றும் இன்டிகோ மெட்டாலிக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.


சேடக் பேட்ஜிங் வாகனம் முன் பக்கத்திலும் பின்புறத்தில் டெயில்லைட்டுகளுக்கு இடையில் வருகிறது. இந்த ஸ்கூட்டர் எல்.ஈ.டி பகல்நேர இயங்கும் விளக்கு வளையம் மற்றும் எல்.ஈ.டி ஹெட்லேம்ப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்க்ரோலிங் எல்.ஈ.டி. , ஒற்றை இருக்கை, பெரிய சில்வர் கிராப் ரெயில்கள் மற்றும் மல்டிஸ்போக் அலாய் வீல்கள் உள்ளன. . 2020 யில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் இந்த ஸ்கூட்டர் அதன் பின் ஐரோப்பா மார்கெட்டில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆரம்பகட்டம் என்பதனாலேயே புனே மற்றும் பெங்களூருவில் இந்த ஸ்கூட்டரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. மேலும், வெகுவிரைவில் பிற நகரங்களிலும் களமிறக்க அது திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் இதற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.


பஜாஜ் செடாக் பற்றிய மேலதிக விபரங்கள் பின்வருமாறு.











Post a Comment

Previous Post Next Post

starclick add