பஜாஜ் Dominar 400



பஜாஜ் நிறுவனத்தின் முதன்மை மொடலான   டொமினார் 400 பிஎஸ் 6 விளங்குகிறது.இந்த பைக் இந்திய சந்தையில்  2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொலைதூர பயணம், அட்வெஞ்சர் மிகுந்த பயணங்களுக்கு இந்த பைக் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

பஜாஜ் நிறுவனத்திற்கு பல்சர் பைக்கை தொடர்ந்து மக்கள் அதிகம் விரும்பிய மொடல்களுள் டோமினோர் 400 அடங்கும். விற்பனையாகும் செயல்திறன் மிக்க பைக்குகளில் இந்த மொடலுக்கு தனி இடம் உண்டு.

மேலும் இந்த   டொமினார் 400 மொடல் வைன் பிளாக் மற்றும்  கிரீன் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது.



டொமினார்  400 நிறுவனத்தின் முக்கியமான மோட்டார் சைக்கிள்களில் முதன்மையானதாகும். இது வசதியான மற்றும் சௌகரியமான சவாரி நிலையை வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றுள்ளது.இது 6 ஸ்பீடு யுனிட்களுடன் சிலிப்பர் கிளட்ச் உடன் இணைகப்பட்டிருக்கும்.இந்த பைக்கில் இடம் பெற்றுள்ள கியர் பொக்சில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

டொமினார் 400 பைக்கின் என்ஜின் 390 டியூக் மொடலில் இருந்து பெற்ற  ஒற்றை சிலிண்டர் லிக்யூட்  கூல்ட் இடம்பெற்றுள்ளது  இது  பிஎஸ்6 முறையில் அதிகபட்சமாக 40hp பவர், 35 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.


மேலும், இது முழு எல்.ஈ.டி விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் எரிபொருள் தொட்டியில் ஒரு சிறிய எல்.சி.டி போன்ற நவீன அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த பைக்கின் மொத்த எடை 187 கிலோ ஆகும்

டொமினார் 400 மாடலில் 43 மிமீ விட்டம் பெற்ற யூ.எஸ்.டி டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்றுள்ளது இது 135 மிமீ பயணிக்கும் திறனை கொண்டுள்ளது. பின்புறத்தில் நைட்ரக்ஸ் ஷாக் அப்சார்பர் இரண்டிலும் ஒரே மாதிரியாக வழங்கப்பட்டுள்ளது..இந்த பைக்கில் இடம் பெற்றுள்ள கியர்பாக்சில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.



டொமினார் 400 மாடலில் முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் பெற்றுள்ளது,இவை டூயல்-சேனல் ஏபிஎஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளதால், சிறந்த பிரேக்கிங் திறனை கொடுக்கும்.
இது முக்கிய பாதுகாப்பு அம்சமாக உள்ளது.

டொமினார் மொடலிலும் எல்இடி லைட்டிங், ஃபுல்லி டிஜிட்டல் பிரைமரி மற்றும் செக்கன்டரி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 13 லிட்டர் ஃபியூயல் டேன்க் மற்றும் எக்சாஸ்ட், டைமண்ட் கட் அலாய் வீல், 3டி லோகோ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

சஸ்பென்சனை பொருத்தவரை, இந்த மோட்டார் சைக்கிள்களில், 43 மிமி யுஎஸ்டி போர்க்கள் மேல் முன்புறத்திலும், மல்டி செட் அட்ஜெஸ்ட்பிள் மோனோ ஷாக்-கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.



பஜாஜ் Dominar 400 பற்றிய மேலதிக விபரங்கள் பின்வருமாறு.











Post a Comment

Previous Post Next Post

starclick add