பஜாஜ் Dominar 250



இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய டோமினார் 250 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 
இது இந்தியாவில் செயல்திறன் மிக்க
 பைக்கிற்கான வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு டோமினார் பைக்குகள் முதல் தேர்வாக இருந்து வருகிறது. இந்த பைக்குகளை வைத்திருக்கூடிய ஓட்டுநர்கள் ஆர்டிக் வட துருவம் முதல் அண்டார்டிகா தென் துருவம் வரை பயணித்துள்ளனர். இதை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் விதத்தில் டொமினார் 250 பைக் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.


ரெட் மற்றும் வைன் பிளாக் ஆகிய இரண்டு நிறங்களில் விற்பனையில் கிடைக்கிறது.. டொமினார் 250 பைக்கில், பஜாஜ் நிறுவனம் ஸ்ளிப்பர் கிளட்ச் வசதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் டொமினார் 400 மொடல்களின் வடிவமைப்பு அம்சங்களை பின்பற்றியே டோமினார் 250 மொடல் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, டூயல் - டோனுடன் கூடிய பாடி கிராஃபிக்ஸ் அமைப்புகள், எல்.இ.டி முகப்பு விளக்குகள் மற்றும் ஏ.ஹெச்.ஓ விளக்குகள் ஆகியவை புதிய மொடலில் இடம்பெற்றுள்ளன.


புதிய பஜாஜ் டொமினார் 250 பைக்கில் 248 சிசி சிங்கிள்-சிலிண்டர் ,லிக்விட் கூலர் எஞ்சின் உள்ளது. இது 25 பிஎச்பி பவர் மற்றும் 23.5 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும். 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் கொண்ட இந்த எஞ்சின் பிஎஸ்-6 விதிகளுக்குட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

டியூக் 250 பைக்கிலும் இதே எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் 250 பைக்கில் 37 மிமீ அப்சைட்-டவுன் ஃபோர்க்ஸ் மற்றும் மோனோ-ஷாக் அப்ஸர்கள் சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன. சக்கரத்தின் முன்பக்கத்தில் 300மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பினபக்கத்தில் 250 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.


இது டொமினர் 400 மொடலை போன்றே சவுகரியமான பயணத்துக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

டோமினார் 250 குறித்து பேசிய பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள் துறை தலைவர் சாரங் கனடே, "டோமினார் பிராண்ட்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரியளவிலான வரவேற்ப்பை பெற்றுள்ளது. நீண்ட தூர சுற்றுலா செல்ல விரும்பும் பைக் ஓட்டுநர்களின் முதல் தேர்வாக இந்த பைக் மாறியுள்ளது. டோமினார் ரைடர்கள் ஐந்து கண்டங்களையும் கடந்து, ஆர்டிக், அண்டார்ட்டிக் கண்டகளையும் கடந்து பயணித்துள்ளது. பைக்கில் உலகம் முழுவதையும் சுற்றுப்பயண செய்ய விரும்பும் ரைடர்களுக்கு டோமினார் 250 ஒரு சிறந்த பைக்காக இருக்கும் என்றார்".



பஜாஜ் Dominar 250 பற்றிய மேலதிக விபரங்கள் பின்வருமாறு.












Post a Comment

Previous Post Next Post

starclick add