அவெஞ்சர் 220 க்ரூஸ்



பஜாஜ் நிறுவனம் பிஎஸ் 6 பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்ட்ரீட் ஐ தொடர்ந்து பிஎஸ் 6 பஜாஜ் அவெஞ்சர் 220 கிரூஸ் ரக மோட்டார் சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலை க்ரூசர் மொடல் இருசக்கர வாகனமாக அவெஞ்சர் 220 க்ரூஸ் விளங்குகிறது.. இந்த பைக் கவர்ச்சியான தோற்றத்துடன்  இளைஞர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .

குரூஸ் 220 பைக்குகள் ஒரே மாதிரியான ஆம்பிள் குரோம் மற்றும் உயரமான விண்ட் ஸ்கிரீன்கள் முன்புறத்தில் இருக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

அறிமுகான நாளில் இருந்து, 220 க்ரூஸ் பைக்குகள் குறித்து வெளியாகியுள்ள பெரியளவிலான அப்டேட் இதுதான்👉👉



முன்னதாக  வெளியிடப்பட்ட  இந்த  பைக்கில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, தற்போது இந்த பைக்கிற்கான பிஎஸ்-6 அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன. எனினும், எஞ்சின் அம்சங்களை தவிர இந்த பைக்கின் கட்டமைப்புகளில் எவ்வித பாக மாற்றங்களும் செய்யப்படவில்லை என பஜாஜ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.



ஆற்றலை பொருத்தவரை அவெஞ்சர் குரூஸ் 220 பிஎஸ்6 மொடல்கள் 220 சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுட்-கூலர் மற்றும்  இன்ஜெக்ட்டட் இன்ஜின்களுடன் 18.7 பிஎச்பி ஆற்றலில் 8,500 ஆர்பிஎம் மற்றும் 17.5 என்எம் டார்க்கில் 7,000 ஆர்பிஎம் லும் இயங்கக் கூடிய திறன் கொண்டுள்ளது.

இந்த இன்ஜின் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
பிரேக்கின் ஆற்றலை பொருத்தவரை, முன்புற டிஸ்க் பிரேக்களுடன் டிரம் யுனிட்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.


அவெஞ்சர் 220 க்ரூஸ் பைக் மிகவும் கிளாசிக்கான தோற்றத்தில், குரோம் வடிவமைப்புகளை கொண்டு சிறந்த மாடலாகவுள்ளது. எனினும், தற்போது குரோம் பூச்சுகள் மாற்றப்பட்டு பிளாக் நிறம் மாற்றப்பட்டுள்ளது.

டெலஸ்கோபிக் முன்புற போர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சர்பர்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.  இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ்கள் வழக்கம் போலவே இடம் பெற்றிருக்கும்.

அவெஞ்சர் 220 க்ரூஸ் பற்றிய மேலதிக விபரங்கள் பின்வருமாறு...












Post a Comment

Previous Post Next Post

starclick add