பஜாஜ் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160



பஜாஜ் நிறுவனம்  அவெஞ்சர் 160 ஸ்ட்ரீட்  மோட்டார் சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.இவை  பிஎஸ்-6 மாசு விதிகளுக்குட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன.. 

புதிய குரூசர் ரக பைக்குகளில் தற்போது அதிகளவில் விற்பனையாகும் பைக் இதுவாகும் , அவெஞ்சர் 
விலை குறைவான க்ரூஸர் பைக் என்ற பெருமைக்கு அவென்ஜர் பைக் 160சிசி மொடல் விளங்குகிறது, இந்த பைக்கில் புதிய விதிமுறைக்கு ஏற்ப சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கைச் சேர்த்திருக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்.

முன்னதாக, பஜாஜ் நிறுவனம் அவெஞ்சர் 180 மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு வைத்திருந்தது. அதற்கு மாற்றாகவே பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்ட்ரீட் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.


பஜாஜ் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160 ஏபிஎஸ்-களில் தற்கால ஸ்டைல்களுடன் கிளாசிக்   டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை விரும்புபவர்களுக்கு உலகத்தரமான கிளாசிக் பைக் அனுபவத்தை அளிக்கும் என்று பஜாஜ் நிறுவனம் கூறியுள்ளது.

பிஎஸ்-4 வெர்ஷன் மொடலிலுள்ள 160.4 சிசி சிங்கிள் சிலிண்டர் எயா கூலர்  மோட்டார் எஞ்சின் உள்ளது இது 15 பிஎச்பி பவர் மற்றும் 13.5 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளியிடும்.
இந்த பைக்களில் பவர் அவுட் புட் அவெஞ்சர் 150 மற்றும் அவெஞ்சர் 180 பைக்களை விட சிறப்பாகவே இருக்கும்.மேலும் இந்த பைக் 5 கியர்பொக்ஸ்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஎஸ்-6 மொடலில், புதிய விதிகளுக்கு ஏற்ப ஃப்யூவெல் இஞ்ஜெக்‌ஷன் சிஸ்டம் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட புகைப்போக்கி குழாய்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர, மற்ற  வடிவமைப்பு விடயங்களில் அவெஞ்சர் 160 ஸ்ட்ரீட் மொடல் பைக் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை.


பஜாஜ் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160 பைக்கில்
  அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் படுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த பைக்கின் ஸ்டைல்கள் மற்ற ஸ்டிரீட் மாடல்களில் இருந்து பெறப்பட்டதாக இருக்கும். மேலும் இதில் ரோடுஸ்டர் ஹெட்லேம்களுடன் எல்இடி ,டே டைம் ரன்னிங் லைட்கள், பிளாக் கலர் கொண்ட இன்ஜின் மற்றும் ரிலாக்சாக ஒட்டு செய்யும் வசதியும் உள்ளது. மேலும் இதில் புதிய கிராபிக்ஸ் மற்றும் பெரியளவிலான  பிளாக் அலாய் வீல்கள் மற்றும் ரியர் கிராப் ரெயில்களும் உள்ளன.


பஜாஜ் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160 ஏபிஎஸ்களில் டெலிஸ்கோபிக் போர்க்கள் முன்புறத்திலும், டுவின் ஷாக்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்களை பொருத்த வரையில், முன்புறம் 220cc சிங்கிள் டிஸ்க் ஏபிஎஸ்களும், பின்புறத்தில் டிரம் பிரேக் செட்அப்களுடன் இருக்கும்.

ஒரிஜினல் பஜாஜ் அவெஞ்சர் 180 பைக்கள் கடந்த 2005 ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இவை குரோம் அவுட்களுடன் சிறிய அளவு கொண்ட குரூசராக வெளியானது. புதிய வெர்சன்கள் இரண்டு வகைகளில் அதாவது, குரூசர் 220 மற்றும் ஸ்டீரிட் 220 வகைகளில் விற்பனைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160 பற்றிய மேலதிக விபரங்கள் பின்வருமாறு.











Post a Comment

Previous Post Next Post

starclick add