பஜாஜ் பல்சர் NS160


புதிதாக வெளியாகியுள்ள, புதிய பஜாஜ் பல்சர் என் எஸ் 160 பைக்குகள் விற்பனையில் களமிறங்கியுள்ளது.. இதில் புதிய பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளமையால் இந்த பைக்கை இளைஞர்கள் விரும்பி வாங்குகின்றனர்.

ஏற்கெனவே விற்பனையில் இருந்த பஜாஜ் பல்சர் 160 பைக்கில் அன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் (ABS) வசதி கிடையாது. இந்த குறையை நிவர்த்தி செய்யும்  விதமாக, புதிதாக வெளிவந்த பல்சர் என்.எஸ்.160 பைக்கில் தற்போது ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்படுகிறது.

தற்போது பயன்பாட்டில் உள்ள இந்த பைக்கில் பின்பக்க டிரம் பிரேக் அமைப்பு இடம்பெற்றுள்ளது.

புதிதாக ஏ.பி.எஸ். யுனிட் தவிர மோட்டார்சைக்கிள் என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில் பஜாஜ் பல்சர் என்.எஸ். பைக்கில் 160.3 சி.சி. திறன் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது
இந்த எஞ்சின் திரவ-குளிரூட்டப்பட்டிருக்கிறது மேலும் மோட்டார் சுவிட்சுகள், கார்பூரேட்டரிலிருந்து எரிபொருள் செலுத்தப்பட்ட அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது .

மேலும் இந்த பைக் என்.எஸ் 200 மொடலில் காணப்படும் கூர்மையான வரிகள், மூர்க்கமான கட்டமைப்புகள் இந்த  மொடலிலும் தொடர்கின்றனர்.



புதிய பஜாஜ் பல்சர் என்.எஸ் 160 பைக்கின் முன்பக்கத்தில் 300 மிமீ பெடல் டிஸ்க் உள்ளது. அதேபோல பின்பக்கத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது.

ஆனால் பிஎஸ் 6 வெர்ஷனில் விற்பனைக்கு வந்துள்ள பஜாஜ் பல்சர் என்.எஸ் பைக், 
பிஎஸ் 4 விட அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ப்ரீமியம் தர பல்சர் என்.எஸ். 160 பைக்கில் 160.3 சிசி இழுவைத் திறன் கொண்ட  வால்வுடன் கூடிய சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 15.5 பிஎச்பி பவர் மற்றும் 14.6 என்.எம் டார்க் திறனை வழங்கவல்லது.


142 எடை கொண்ட இந்த மோட்டார் சைக்கிளில் பஜாஜ் நிறுவனம் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் அம்சத்தை பொருத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது  விற்பனையாகும் 160சிசி செக்மென்டில் சக்திவாய்ந்த மொடலாக 2020 பிஎஸ்6 பஜாஜ் பல்சர் என்.எஸ் 160 மொடலை முன்னிறுத்தி யுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் பல்சர் NS160 பற்றிய மேலதிக விபரங்கள் பின்வருமாறு.











Post a Comment

Previous Post Next Post

starclick add