BAJAJ PULSAR 220F


பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 220 எஃப் மோட்டார்சைக்கிளின் ஏ.பி.எஸ். வேர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது மிகவும் பிரபலமாக விற்பனையாகி வரும் பைக்களில் ஒன்றாக பஜாஜ் பல்சர் 220 எஃப் பைக்குகள் இருந்து வருகிறது. பஜாஜ் நிறுவனம், அண்மையில் இந்த பைக்குகளை மேம்படுத்தி விற்பனை செய்து வருகிறது.

பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த பைக்கில் கருப்பு நிறத்துடன் கூடிய  சிவப்பு கலர் பரவலாக உள்ளது. பக்கவாட்டு ஃப்ரேமிங்கில் உள்ள டீகேல்ஸ் கருப்பு நிறத்துடன் கூடிய (orange) நிறத்தில் வர்ணம் பூசப்பட்டு இருக்கிறது.. மேலும் பைக்கின் முன்பக்கம் மற்றும் பின் சக்கரங்களில் சிறியளவிலான  (orange) ஸ்டிரிப் உள்ளது. இந்த வண்ண அமைப்பு இந்த பைக்கிற்கு  எடுப்பாக இருக்கிறது.

இந்த பைக்கின் பெட்ரோல் டேங்கிள் 3D லோகோ எம்போஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன்பக்க வயிற்றுப்பகுதியில்  தனித்துவமிக்க கிராப்பிக்ஸ்களுடன் ஸ்பிலிட் சீட் மற்றும் ஸ்பிலிட் கிராப் ரெயில் பார்கள் மற்றும்  கார்பன் சைலன்சர்கள் போன்றவை இந்த பைக்கிற்கு நேர்த்தியை கொடுக்கிறது.

புதிய பல்சர் மோட்டார்சைக்கிளில் 220சிசி சிங்கிள் சிலிண்டர் , ஒயில் கூலர்  என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 20.9 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 18.5 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.


இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் 

 5 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளத்தாக்க நைட்ரக்ஸ் (shock) அப்சர்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 260 எம்.எம். டிஸ்க், பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. 


இந்த பிரேக்குகளுடன் சிங்கிள் சனல் ஏ.பி.எஸ். சிஸ்டம் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய கலர் ஒப்சனை தவிர்த்து, பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்குகள் பெரியளவில் வழக்கமான வகையாகவே இருக்கும். 2019 மொடல் ஸ்போர்ஸ் வசதிகளுடன் கூடிய மறுசீரமைப்பு செய்யப்பட்ட இன்ஸ்டுரூமென்ட் கன்சோல்களுடன் ப்ளூ பிளாக் கலர்களுடன்.   லைட் டிஸ்பிளே உடன் அமைக்கப்பட்டிருக்கும்.

BAJAJ PULSAR 220F பற்றிய மேலதிக விபரங்கள் பின்வருமாறு.












Post a Comment

Previous Post Next Post

starclick add