Bajaj Pulsar 180 NF

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பிரண்டில் பல பைக் மொடல்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தையும், பயன்பாட்டையும் பொறுத்து பல்வேறு வகைகளில்   பல்சர் பைக்குகள் விற்பனையில் இருக்கிறது.

மேலும், பல்சர் வரிசையில் பவர்புல் மொடலாக இருக்கும் பல்சர் 220F பைக்கின் டிசைன் அம்சங்களுடன் இந்த புதிய பல்சர் 180 NF பைக் வந்துள்ளது. இந்த புதிய மொடல் பல்சர் 180F நியான் எடிசன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

குறிப்பாக , பஜாஜ் பல்சர் 220F பைக்கின் புரொஜெக்டர் ஹெட்லைட்டை அப்படியே இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த பைக்கில் ஒரங்ச் வண்ண ஸ்டிக்கர் அலங்காரம் மூலமாக சிறப்பு தோற்றமளிக்கிறது.

புதிய பிஎஸ் 6 பல்சர் 180 NF மொடலின் வடிவமைப்பு , பல்சர் 220NF மாடலை பின்பற்றியே உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போதைய டிரென்டிங்கிற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த புதிய  மோட்டார்சைக்கிளில், எலெக்டிரானிக் ஃபியூயல் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

180 NF  நியான்  பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்சக்கரத்தில் 260 மிமீ டிஸ்க்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க்கும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் முக்கிய பாதுகாப்பு அம்சமாக உள்ளது.


இதன் பி.எஸ் 6 ரக 178.6 சிசி என்ஜின் 16.8 php  பவர், 14.52  என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் பி.எஸ்.4 என்ஜினும் இதே செயல்திறன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பி.எஸ்.6 ரக என்ஜின் தவிர புதிய மோட்டார்சைக்கிளில் எவ்விக மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. முந்தைய மொடல்களை போன்றே முன்புறம் டெலிஸ்கோபிக் அன்டி-ஃபிரிசன் புஷ் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
 பின்புறம் ஐந்து வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய நைட்ராக்ஸ் (shock) அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த 180F பைக் மட்டும் பிஎஸ்6 தரத்திற்கு புதுப்பிக்கப்படவில்லை, அதன் உடன் வெளியான 220F கூட பிஎஸ் 6 தரத்திற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.அந்த பைக் குறித்து இன்னொரு பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

Bajaj Pulsar 180 NF பற்றிய மேலதிக விபரங்கள் பின்வருமாறு.









Post a Comment

Previous Post Next Post

starclick add