PULSAR NS 200

இளைஞர்கள் மத்தியில் பஜாஜ்  பல்சர்  பைக்குகளுக்கு எப்போதுமே மதிப்பு அதிகம். அதற்கு மேலும் மகுடம் சூட்டும் விதமாக பஜாஜ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ள பைக் தான் புதிய பல்சர் என்.எஸ்200, இது பார்ப்பதற்கு கம்பீரத் தோற்றத்துடன் இளைஞர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது



2014-ம் ஆண்டு  அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் மொடலில் அவ்வப்போது சிறுசிறு மாற்றங்களை பஜாஜ் நிறுவனம் செய்து வந்தது ..


முன்னதாக இந்த மோட்டார்சைக்கிளில் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம், மேம்பட்ட கெட்டலிக் கன்வெர்ட்டர் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டது. 


தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மொடலில் 199.5 சிசி எயார் கூலர்  சிங்கிள் சிலிண்டர் பிஎஸ்-4 எஞ்சின் உள்ளது. இது 23 பிஎச்பி பவர் மற்றும் 18.3 என்.எம் டார்க் திறன் அதிகப்பட்சமாக கிடைக்கும். 


அதேபோல இந்த பைக்கின் முன்பக்க சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன மேலும் ஆர்.எல்.பி சென்சாருடன் கூடிய சிங்கிள் சேனல் ஏபிஎஸ் முன்பக்க சக்கரத்தில் இடம்பெற்றுள்ளது.


   ஆர்எஸ் 200 பைக்  ரெட் நிறத்தை தவிர,   ரேசிங் ப்ளூ மற்றும்  பிளாக் ஆகிய நிறங்களில் கடந்த 2017ம் ஆண்டே வெளியிடப்பட்டுள்ளது.. மேலும் தற்போது  ரேசிங் ரெட் நிற பைக்குகளை வெளியிட்டுயிருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.  தோற்றத்தில் புதுமை  சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த பைக்கின் விற்பனையை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது


பஜாஜ் பல்சர் என்.எஸ்.200 மொடலின் அம்சம் மற்றும் வடிவமைப்பில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பைக் பல்வேறு புதிய நிறங்களில் தற்போது கிடைக்கிறது..


மணிக்கு 141 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த பைக்கில்  ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பூமரேங் வடிவம் பெற்ற எல்.இ.டி டெயில் விளக்குகள், டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் எக்ஸாஸ்ட் பைப்புகளை பெற்றுள்ளது.


பல்சர் ஆர்.எஸ்.200 பைக்கின் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பகுதியில் மோனோஷாக் நைட்ரஸ் ஆகியவை சஸ்பென்ஷன் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

பஜாஜ் பல்சர் என்.எஸ்.200 பற்றிய மேலதிக விபரங்கள் பின்வருமாறு.











Post a Comment

Previous Post Next Post

starclick add