ரோயல் என்பீல்ட் கன்டினென்டல் ஜிடி 650

மோட்டார் பந்தயத்துக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ராயல் என்பீல்ட் கன்டினென்டல் ஜிடி 650 மோட்டார் சைக்கிள் அமெரிக்காவில் பொன்னேவில்லே  எனுமிடத்தில் சாதனை படைத்துள்ளது.

கன்டினென்டல் ஜிடி 650 யின்
மற்ற பாகங்கள் பந்தய வீரர்களின் விருப்பத்துக்கேற்ப வடிவமைக்கப்பட்டவை. சஸ்பென்ஷன், நீண்ட பின்பகுதி, இலகுவான அதேசமயம் ஸ்திரமான வாகன சக்கரங்கள், பந்தய மைதானத்தில் வழுக்கிச் செல்வதற்கேற்ப வழுவழுப்பான டயர்கள் இதன் சிறப்பம்சங்களாகும்.

கிளிப்-ஒன் ஹண்டில் பார், கால்களை வைப்பதற்கு வசதியான இடம் ஆகியன இதில் செய்யப்பட்ட மாற்றங்களாகும்
இது 648 சிசி திறன் கொண்ட எயார்
 கூலர் மற்றும் இரட்டை என்ஜினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக   47 பிஎச்பி பவரையும், 52 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியது. 6 கியர்களைக் கொண்ட இந்த மோட்டார் சைக்கிளில் ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வசதி உள்ளது மற்றும் அண்டி பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) இதில் சிறப்பம்சமாகும். இருபக்க சைலன்ஸருடன் ஸ்திரமான மோட்டர் சைக்கிளாக  விற்பனைக்கு வந்துள்ளது.

முந்தைய மொடலான  இன்டர்செப்டரை விட இது 4 கிலோ எடை குறைவாகும். ஆனால் அதைவிட இதில் பல அம்சங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதிவேகத்தில் செல்லும்போதும் இது ஸ்திரமாக இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.  1960-ம் ஆண்டு வெளியான கஃபே ரேஸர் மொடலைப் போன்று இது தோற்றமளிப்பதாக பலர் கூறுகின்றனர்.

GT 650 - 198 கிலோ கொண்டதாகும். க்ரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய விண்ட் ஸ்க்ரீன், Bar End மிரர்கள்,  SaddleBag, S&S எக்ஸாஸ்ட் பைப், இன்ஜின் கார்ட் என மொத்தம் 40 உதிரிப்பாகங்கள் இந்த பைக்குகளுக்குக் கிடைக்கின்றன.

மேலும் 1,400மிமீ வீல்பேஸ், 174மிமீ கி.கிளியரன்ஸ், 804மிமீ சீட் உயரம் ஆகியவையும் இந்த பைக்கிற்கு எடுப்பாக இருக்கிறது.  மற்றும் கட்டுமானத் தரம் விஷயத்தில், ரோயல் என்ஃபீல்டின் வளர்ச்சியை இந்த பைக் பிரதிபலிக்கிறது.

இந்த பைக்குகள் விலை அதிகம் என்றாலும்  கொடுக்கும் காசுக்கு ஏற்றவகையில் அமைந்திருக்கிறது. சிம்பிளான டிசைன் மற்றும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்தாலும், ஓட்டும் அனுபவத்தில் இந்த பைக் மொடர்ன் பைக்குகளுக்கு இணையாகவே இருக்கும். கடந்த ஆண்டில் மட்டும் 8.2 லட்சம் பைக்குகளை இந்த நிறுவனம் விற்பனை செய்திருப்பதை வைத்துப் பார்க்கும்போது, இந்த பைக்குகளுக்கான வரவேற்பு அதிரடியாகவே இருக்கலாம்.

ரோயல் என்பீல்ட் கன்டினென்டல் ஜிடி 650 பற்றிய மேலதிக விபரங்கள் கீழ்வருமாறு.











Post a Comment

Previous Post Next Post

starclick add