பஜாஜ் ஆட்டோ லிமிடெட் அறிமுகம்


பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் இது சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும். 

பஜாஜ் நிறுவனம் 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் நிறைய இடங்களில் பல ஆலைகளை
அமைத்துள்ளது.

இன்றைய நடுத்தர குடும்பத்தினை சேர்ந்த இளைஞர்களின் கனவு பைக் "பல்சர்" இந்த நிறுவனத்தை சேர்ந்ததாகும்.

பஜாஜ்  வாகனங்கள் உலக உற்பத்தியில்
நான்காவது இடத்தில் இருக்கிறது, இந்தியாவின் இரண்டவாது மிகப்பெரிய இருசக்கர வாகன  உற்பத்தியாளராகவும்  உள்ளது. இந்நிறுவனம் மஹாரா ஸ்டிராவில் உள்ள புனே என்னுமிடத்தை  அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது.
  மோட்டர் சைக்கிள்கள்  ஸ்கூட்டர்கள்   ஆட்டோ போன்றவைகளை பஜாஜ் நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது.

ராஜஸ்தான் வணிகர் மூலமாக  ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய  உற்பத்தி நிறுவனமாகும்.
 1945ம் ஆண்டில் தனது உற்பத்தியை தொடங்கியது..

அதே ஆண்டின் நவம்பரிலிருந்து பஜாஜ் ஆட்டோ அறிமுகப்படுத்தப்பட்டது.

1959 ஆம் ஆண்டில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை தயாரிப்பதற்கு இந்திய அரசாங்கத்திடம் பஜாஜ் நிறுவனம் அனுமதியை பெற்றுக்கொண்டது.

1970 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் அதன் 100,000 வது வாகனத்தை உற்பத்தி செய்தது.

 1977 ஆம் ஆண்டில் 100,000 வாகனங்களை ஒரே  ஆண்டில் தயாரித்து விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

1986 ஆம் ஆண்டில் 500,000 வாகணங்களை ஒரு வருடத்தில் தயாரித்து விற்பனை செய்யும் அளவுக்கு இந்நிறுவனம் உயர்ந்தது.


1995 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் மொத்தமாக பத்து மில்லியன் வாகனங்களைத் தயாரித்திருந்தது. நாளுக்கு நாள் இதன் வளர்ச்சி அமோகமாக அமைந்தது.. மேலும் 50 நாடுகளுடன் தனது தொடர்பைப் பேணி வருகிறது.


பல தரமான வாகனங்களை அறிமுகம் செய்து விற்றபனை செய்த பஜாஜ் நிறுவனம் 
அண்மைக்காலங்களில் பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அறிமுகம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.


1 Comments

Post a Comment

Previous Post Next Post

starclick add