ரோயல் என்பீல்ட் இன்டர்செப்டர்

பைக்குகளை விரும்புவர்களுக்கு ரோயல் என்ஃபீல்ட் மீது எப்போதும் ஈர்ப்பு உண்டு. விலை அதிகம் என்றாலும், தங்கள் கனவு வாகனமாக என்றும் இளைஞர்கள் மத்தியில் திகழ்ந்து வருகிறது.

முதல் முறையாக 650சிசி திறன் கொண்ட Interceptor INT 650 மற்றும் Continental GT 650 ஆகிய வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை மிலனில் நடைபெற்ற மோட்டர் ஷோவில் ரோயல் என்ஃபீல்ட் வெளியுலகிற்கு காட்டியது. இன்டர்செப்டர் மொடல் பார்க்க பழைய காலத்து கம்பீர  தோற்றத்துடன், . பைக் பிரியர்களை அதிகம் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


ரோயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டர் 650 பற்றிய முழு விபரம்:


ராயல் என்ஃபீல்டின் புதிய 648cc, பெரலல் ட்வின் இன்ஜின் வைத்து வெளிவரும் முதல் பைக் இதுதான் என்பீல்ட்   இன்டர்செப்டர் 650 வாகனங்களில் 8v எயார் கூலர், 648சிசி திறன், 47bhp, 52Nm டர்க்யூ, 6 மடங்கு வேக கியர் பாக்ஸ் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன்மூலம் இருசக்கர வாகன தயாரிப்பில் அடுத்தப்படியை எட்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் செயல்திறன் ரோயல் என்ஃபீல்ட் ரசிகர்களுக்கே அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது, 160 கிலோ மீட்டருக்கு அதிகமான உச்சபட்ட வேகம் இருப்பதால் சாதனை செய்வதற்கு உத்தரவாதம் உண்டு. 80% டார்க்கை 2,500rpm-ல் கொடுத்துவிடுவதால் 100-120 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்வதற்கு இன்ஜின் சிரமப்படவே தேவையில்லை. இந்த பைக்கின் சத்தம் மட்டும் தற்போதைய ரோயல் என்ஃபீல்ட் ரசிகர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தரலாம். ராயல் என்ஃபீல்டின் பழைய புடுபுடு சத்தம் இந்த பைக்கில் இல்லை என்றே கூறலாம்.. அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் Counter Balancer  உள்ளது பைக்குக்கு பெரிய ப்ளஸ்.
 இந்த ரோயல் என்ஃபீல்டில் அதிர்வுகளை எதிர்பார்க்கமுடியாது.

வாகன விற்பனைச் சந்தையில் இந்த வாகனங்களுக்கு போட்டியே இல்லை என்று கூறப்படுகிறது.

இன்டர்செப்டர் 650, சிம்பிளான ரெட்ரோ டிசைனைக் கொண்டிருக்கிறது. தட்டையான சிங்கிள் சீட்டில், 2 பேர் வசதியாக உட்காரலாம். வழக்கமான சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார் மற்றும் கொஞ்சம் பின்தள்ளி வைக்கப்பட்டிருக்கும். பெரிய Heel Plate உடனான ஃபுட் பெக்ஸ் ஆகியவை சேர்ந்து, சொகுசான  டிரைவிங் செய்யலாம் . 13.7 லிட்டர் பெட்ரோல் டேங்க், போன்றவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது

ஸ்பீட் கியர்பாக்ஸ் மூலம் 47 ஹெச்பி மற்றும் 52 என்எம் உச்சமுறுக்குவிசையை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. உலக மோட்டார் சைக்கிள் டெஸ்ட் சைக்கிள் மற்றும் 25.5 கிமீ மைல் மைலேஜ் கொண்டதாக கூறப்படுகிறது.

ரோயல் என்பீல்ட் இன்டர்செப்டர் பற்றிய மேலதிக விபரங்கள் பின்வருமாறு.









1 Comments

  1. Arumai thalaiva..... Pahh mersala iruku. Summa verithanam. Bugiluuuuu enda mathiri sarkar a iruku

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post

starclick add