ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350

ரோயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்  ஆளுமையான தோற்றம், மிரட்டலான புகைப்போக்கி சப்தம் ஆகியவை பல தசாப்தங்களாக இளைஞர்களை கவர்ந்த விஷயமாக இருக்கிறது. பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் மிக நீண்ட காலமாக இருந்தாலும் இந்த மோட்டார்சைக்கிளை இளைஞர்கள் விரும்பி வாங்குகின்றனர்..
இந்த பைக்கில் க்ரோம் வளையத்துடன் கூடிய வட்ட வடிவ ஹெட்லைட், நேர்த்தியான பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு, வசதியான இருக்கைகள்,
நீளமான க்ரோம் சைலென்சர், வலிமையான மட்கார்டுகள்
என அனைத்துமே சிறப்பாக இருப்பதுடன் தோற்றம் பிரம்மாண்டமாக இருப்பதே அனைவரின் கவனத்தை ஈர்ப்பதற்கு காரணம்.

அண்மையில் விற்பனைக்கு வந்த ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக, தன்னுடைய தயாரிப்புகளை மேம்படுத்தும் நோக்கில் ரோயல் என்ஃபீல்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

அதில் ஒரு பகுதியாக, கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு 16 வகையிலான புகைப்போக்கி குழாய்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான உதிரி பாகங்கள் அறிமுகமாகியுள்ளன.

அதன்படி கிளாசிக் 350 மொடலை வைத்திருக்கும் உரிமையாளர்கள், தங்களுடைய விருப்பத்திற்கேற்ப பைக்கின் தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

கிளாசிக் 350  மோட்டார்சைக்கிளில் 346 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீட்  கியர்  பொக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.  பள்ளங்களை இலகுவாக கடக்கும் வகையில்  இதன் சஸ்பென்ஷன் சிறப்பாக இருக்கிறது.

கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. ஸ்பீடோமீட்டர், பேட்டரி சார்ஜ் இண்டிகேட்டர் மற்றும் ஓடோமீட்டர் தகவல்களை அதில் பெறலாம். இந்த பைக் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மற்றும் கிக் ஸ்டார்ட்  மொடல்களில் கிடைக்கிறது.

கிளாசிக்  350 மிக சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த க்ரூஸர் ரக மொடல்
ரோயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மொடலாகவும் விளங்குகிறது. தினசரி பயன்பாடு மற்றும் நீண்ட தூர பயன்பாடு என இரண்டிற்கும் மிக சரியான தேர்வாக இருக்கும்.

இத்துடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக்350 தொடர்பான மேலதிக விபரங்கள் கீழ்வருமாறு.






 

Post a Comment

Previous Post Next Post

starclick add