Royal Enfield thunderbird 350cc & 500cc


 ரோயல் என்ஃபீல்ட் நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் க்ரூஸர் ரக தண்டர்பேர்ட் 350cc & 500cc மொடல்கள் மீதான ஈர்ப்பினை அதிகரிக்கும் வகையில் மிகவும் ஸ்டைலிஷாக அறிமுகப்படுத்தியுள்ளது.
சாராசரியான தண்டர்பேர்ட் பைக்கிற்குரிய தனித்துவம் பெற்ற டிசைன் வடிவமைப்புகள் உள்ளன.
அவற்றுடன் வட்ட வடிவிலான புரொஜக்டருடன் கூடிய முகப்பு விளக்குகள், எல்.இ.டி பகல்நேர விளக்குகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

கஸ்டமைஸ் பைக் போன்ற தோற்ற பொலிவினை வெளிப்படுத்தும் வகையில் குறைந்த நீளம் பெற்ற ஹேண்டில் பார், பெட்ரோல் டேங்க் தவிர மற்ற பாகங்களுக்கு கருப்பு நிறம் வழங்கப்பட்டும்,  தனித்தனி இருக்கைகளுக்கு பதிலாக  ஒற்றை பிரிவு கொண்டு இருக்கை வழங்கப்பட்டுள்ளது.
ரோயல் என்ஃபீல்டின் வரலாற்றில் முதன்முறையாக 9 ஸ்போக்குகளை பெற்ற அலாய் வீல் வழங்கப்பட்டு கூடுதலாக ட்யூப்லெஸ் டயரினை வழங்கியுள்ளது மற்றும் டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டர் இருபிரிவு அமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது

தண்டர்பேர்ட் 350cc  மொடலில் சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களும், தண்டர்பேர்டு 500cc மாடலில் நீலம்  மற்றும் ஒரேஜ்ஞ் ஆகிய இரு நிறங்களை பெற்றிருக்கும்.
புதிய  என்ஃபீல்டு தண்டர்பேர்ட் 350cc மற்றும் 500cc மொடல்களில் பிளட் ஹேண்டில் பார், புதுப்பிக்கப்பட்ட இருக்கை, நடுவே  கால்வைக்கும் வசதி இருக்கின்றன. 

தண்டர்பேர்ட் 350cc மொடலைப் பொறுத்தவரை 346சிசி சிங்கிள் சிலிண்டர், எயார் கூல்  எஞ்சின், 19 bhp மற்றும் 28 Nm திறன், 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் உள்ளன..

அதேபோல தண்டர்பேர்ட் 500எக்ஸ் பைக்கில் உள்ள 499சிசி சிங்கிள் சிலிண்டர் எயார் கூல் எஞ்சின் 27 பிஎச்பி பவர் மற்றும் 41.3 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

இரண்டு புதிய தண்டர்பேட் பைக்கிற்கும் ரோயல் என்ஃபீல்ட் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ்  வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 டேன்க் வடிவைப்பிலும் மாற்றம் செய்யப்படாமல், அதிக பிரகாசமான நிறம் பூசப்பட்டுள்ளது.

ரோயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின்  மொடல்களில் அன்டி-லாக் பிரேக்ஸ் அல்லது ஏபிஎஸ் அம்சம் இடம்பெற்றிப்பது தண்டர்பேர்ட் 350Xக்ருசைரில் தான்.


இரண்டு பக்க சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளன. தவிர இந்த பைக்கில் அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் சிறியளவிலான ஹேண்டில்பார் வழங்கப்பட்டுள்ளது.

Royal Enfield thunderbird 350cc & 500cc பற்றிய மேலதிக விபரங்கள்.















Post a Comment

Previous Post Next Post

starclick add