பஜாஜ் பல்சர் 150 பைக்குகள்



பஜாஜ் நிறுவனத்தின் சிறந்த பைக்காக கருதப்படுவது பல்சர் இதற்கு தனி மதிப்புண்டு.  அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது
 பல்சர் பைக்குகளில் பல மொடல்கள் இருக்கின்றன..
 வாடிக்கையாளர்கள்  பணம் மற்றும் தரம் அடிப்படையில் பைக்குகளை வாங்குகின்றனர்.

இந்நிறுவனத்தின் பல்சர் வரிசை பைக் மொடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
தற்போது பின்வரும் பல்சர் பைக்குகள் விற்பனையில் இருக்கிறது.

  • பஜாஜ் பல்சர் 125
  • பல்சர் 150
  • பல்சர் 180F
  • பல்சர் என் எஸ்160
  • பல்சர் 220F
  • பல்சர் என் எஸ் 200
  • பல்சர் ஆர் எஸ் 200

பஜாஜ் பல்சர் 150 பைக் இதில்   மிகவும் பிரபலமானது.. இந்த மொடல் பைக்குகள் அதிகம் விற்பனையாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் பல்சர் 150

இந்த பைக் பல்சர் 150 நியான் கலெக்ஷன் என அழைக்கப்படுகிறது. இது பல நிறங்களையும்மற்றும் கிராஃபிக்சையும் கொண்டுள்ளது.


மேலும் இந்நிறுவனம் புத்தம் புதிய பல்சர் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை  அறிமுகம் செய்தது.  அவையாவன
  • பல்சர் 150 மற்றும் 
  • பல்சர் 150 ட்வின் டிஸ்க்
 என இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

இந்த பைக் எரிபொருள் மூலம் கார்பன் வெளியேற்றும் விதிமுறையான பி.எஸ்.6-க்கான விதிகளை ஈடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய மாற்றமாக  டிஸ்க் பிரேக் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்சக்கரத்தில் 260மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு இருக்கின்றன.


பி.எஸ் 6 பஜாஜ் பல்சர் 150 மொடலில் பஜாஜ் நிறுவனம் தயாரித்த புதிய ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளதுb முக்கிய அம்சமாகும். இது எரிபொருள் பயன்பாட்டையும் மேம்படுத்துகிறது. இதனை பராமரிப்பதும் எளிமையான விஷயம் .  மெல்லிய தொடுதல் மூலம் ஸ்டார்ட் ஆகும் வசதியையும் கொண்டுள்ளது.

மேலும் ஸ்பிளிட் இருக்கை வசதியையும் கொடுத்திருக்கிறது. புதிய பெடல்கள் மற்றும் புதிய பின்புற  கைப்பிடிகளும் மாற்றங்களாக உள்ளன. இந்த பைக்கில் முன்புறத்தில் 37மிமீ ஃபோர்க்குகளுடன் சஸ்பென்ஷன் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது.


பல்சர் 150 பி.எஸ் 6  பைக்  சிங்கிள் சிலிண்டரை கொண்டுள்ளது.
இதன் என்ஜின் 13 பி.எச்.பி. பவர், 13.25 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மேலும் 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டியூப்லெஸ் டையர்களும் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Black குரோம் மற்றும் black ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.



பஜாஜ் பல்சர் 150 பற்றிய மேலதிக விபரங்கள் பின்வருமாறு.










Post a Comment

Previous Post Next Post

starclick add