பஜாஜ் பல்சர் 125


மிகவும் பிரபலமாகவுள்ள மோட்டார் சைக்கிள்களில் பல்சருக்கு சிறப்பிடமுண்டு. இதை வைத்திருக்கும் ஒவ்வொரு இளைஞரும் தன்னை ஒரு சாதனையாளராக நினைத்துக் கொள்வார்.

பஜாஜ் நிறுவனம்   பல்சர் பைக்கிற்கு கூடுதல் சிறப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய பல்சர் 125 சிசி மொடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது தோற்றத்தில் பல்சர் 150 சிசி பைக்கின் அம்சங்களை பெருமளவில் பெற்றுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளில்  முன்புறம் டிஸ்க் பிரேக் கொண்டிருக்கிறது.


பல்ஸர் 150 பைக்கில் உள்ளதை போன்ற ஸ்டைலிங் அம்சங்களை பெற்ற பல்சர் 125 ஒரு புதிய ஹெட்லைட் கவுல் பேனலை கொண்டிருப்பதுடன் புதிய (body) கிராபிக்ஸ், ஒரே வகையான இருக்கை மற்றும் கிராப் ரெயில் வழங்கப்பட்டிருக்கின்றது.


மேலும் இந்த பைக்கில் 124சிசி சிங்கிள் சிலிண்டர் மற்றும் எயார் கூலர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
 புதிய பிஎஸ்6 என்ஜின் 12 php பவர், 11 NM டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பல்சர் 125 நியான் மொடலில் எரிபொருள் கலன், முகப்பு விளக்கு, பிடிமானம் மற்றும் ரிம்களில் பிரத்யேகமான நிறப் பூச்சு உள்ளது.

125 நியான் பிஎஸ்6 மொடல்  புளூ,  ரெட் மற்றும் பிளாட்டினம் சில்வர் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.


பஜாஜ் பல்சர்  டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

இந்த பைக்கின்  மொடலில் 170 மீ டிரம் பிரேக் முன் சக்கரத்திலும், 130 மிமீ டிரக் பிரேக் பின் சக்கரத்திலும் இடம்பெற்றுள்ளன.

இருப்பினும் பல்சர் 150-யில் இருப்பது போன்ற எரிபொருள் கலன் கவுல் உள்ளிட்ட அம்சங்கள் இந்த பைக்கில் இடம்பெறவில்லை.

டிஜிட்டல் அனலாக் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டருடன்  வந்துள்ள இந்த பைக்கில் மிக நீளமான இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 அப்டேட் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இது முந்தைய மொடலில் வழங்கப்பட்ட அம்சங்களுடன் கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் எடை 140 கிலோ ஆகும். இது பல்சர் சீரிஸ் மாடல்களில் அதிக எடை கொண்ட மொடல் ஆகும்.

பஜாஜ் பல்சர் 125 பற்றிய மேலதிக விபரங்கள் பின்வருமாறு.











Post a Comment

Previous Post Next Post

starclick add