Honda CBR 1000RR Fire Blade



Honda வின் பெரும்பாலான தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

சாதாரண பைக்குகளில் இருந்து ஆடம்பர பைக்குகள் வரை honda நிறுவனம் மக்களுக்கு வழங்குகிறது


பட்ஜெட் ரக பக்குகளை சராசரியான டீலர்ஷிப்புகளில் விற்பனை செய்கிறது. விலை உயர்ந்த ப்ரீமியம் தர பைக்குகளை "பிக் விங்" என்ற ஷோரூம் பெயரில் விற்பனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அதன்படி, ப்ரீமியம் பைக் சந்தையில் புதிய மொடல்களை Honda அறிமுகம் செய்து இருக்கிறது. இவை அனைத்தும் பிக் விங் ஷோரூம் மூலம் விற்பனை செய்யப்படும். 



இந்த ஷோரூமின் மூலம் 7 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஐக்மா கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட 

1.சிபிஆர்1000 ஆர்ஆர்-ஆர் பைக்,

 Fireblade 

 2.Fireblade எஸ்பி என இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



 இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை கீழே பார்க்கலாம்



சிபிஆர் ஆர்ஆர் ஆர் Fireblade பைக்

ஆர்சி213வி எஸ் போன்ற ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. 


இது உலக அளவில் பிரசித்தி பெற்ற பைக்காக காணப்படுகிறது. பைக் பந்தயத்தில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுத் தந்த பைக்கான ஹோண்டாவின் ஆர்சி213வி பைக்கின் அடிப்படையில் சாதாரண சாலையில் பயன்படுத்தகூடிய வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.


இதில் ட்வின் எல்இடி ஹெட்லேம்ப்கள், பல்வேறு எயார் வேன்ட்கள் மற்றும் கூர்மையான வால் பகுதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் ஃபேரிங் ஹோண்டாவின் மோட்டோ ஜிபி மெஷினில் இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது

 



ஹோண்டா ஆர்சி213வி பைக்கின் சேஸீ கட்டமைப்பின் அடிப்படையில் இந்த பைக் முற்றிலும் புதிய மொடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. வடிவமைப்பு மட்டுமின்றி, எஞ்சின் பாகங்கள் மற்றும் தொழில்நுட்பமும் பந்தய பைக்கின் அடிப்படையிலான சிறப்பு அம்சங்களை இந்த சூப்பர் பைக் பெற்றுள்ளது. ஆகவே மக்கள் மத்தியில் இந்த பைக்குக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது .


ரெட் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 


பைக்கின் முன்புறத்திலுள்ள ஷோவா பிபிஎஃப் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் ஷோவா லைட் மோனோஷாக் அப்ஸபர்கள் என்பவை சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன. 


  லித்தியம்-அயன் மின்கலத்துடன் வரும் முதல் மோட்டார் சைக்கிள் இதுவாகும்.

இதில் 4 சிலிண்டர்கள் கொண்ட 999.9 சிசி லிக்குயிட் கூலர் எஞ்சின் உள்ளது. 

இந்த சக்திவாய்ந்த எஞ்சின் அதிகபட்சமாக 214 எச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 


இந்த பைக்கின் புகைப்போக்கி அமைப்பு 

, நீளமான சைலென்சர் குழாய் ஆகியவற்றுடன் வித்தியாசமான புகைப்போக்கி சத்தத்தை வெளிப்படுத்தும்.



பைக்கின் உட்புறத்தில் டைட்டானியம் மற்றும் உயர்தர பாகங்கள் இடம்பெற்றுள்ளன. வளைவுகளில் பாதுகாப்பாக செல்லும் விதத்தில் இந்த பைக்கின் வீல் பேஸ் 1455 மிமீ அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.

பைக்கில் உள்ள 5 இஞ்ச் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், இந்த பைக்கின் அனைத்து செயல்பாடுகளையும் வழங்கும். வாகனத்தின் அனைத்து செயல்பாடுகளையும் இதன்மூலமே கட்டுப்படுத்த முடியும்.

மிகச் சிறப்பான கையாளுமையையும், கட்டுறுதியையும் இந்த பைக் பெற்றிருக்கிறது.

Honda CBR 1000RR பற்றிய மேலதிக விபரங்கள் பின்வருமாறு.












Post a Comment

Previous Post Next Post

starclick add