HONDA CBR 650 F

புதிய Honda CBR 650F பைக் புதிய மேம்படுத்தப்பட்ட என்ஜின் மாறுதல்களுடன் இத்தாலியில் நடைபெற்ற " EICMA" மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.

சி பி ஆர் 650எஃப் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் தரவல்ல ஸ்போர்ட்டிவ் ரக பைக்காகும்.

தற்போது வெளிவந்துள்ள CBR 650F தோற்றத்தில் எந்த ஒரு பெரிய மாற்றமும் செய்யப்படவில்லை ஆனால் Honda நிறுவனம் மெக்கானிக்கல் அப்டேட்டுகளில் கவனம் செலுத்தியுள்ளது.


இந்த பைக் முந்தைய மொடலை போன்ற வடிவமைப்பு கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்த தோற்றம் அழகாக காட்சியளிக்கிறது. Honda CBR 1000 RR மொடலை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள CBR 650F இன் தோற்றம் கூர்மையாகவும், கவர்ச்சிகரமாகவும் உள்ளது.

ஸ்போர்ட்டிவ் முகப்பு விளக்குகள் மற்றும் பக்கவாட்டில் ஸ்டைலிங்கான தோற்றம் , பின்புறம் என ஓட்டுமொத்தமாக மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.


புதிய மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லேம்ப் முற்றிலும் வித்தியாசமாக காட்சியளித்தாலும், வடிவமைப்பில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை. இதனை பொருத்தியுள்ள விதம் இதனை வித்தியாசமாக வெளிப்படுத்துகிறது.

86பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திரவ மூலம் குளிர்விக்கும் 4 சிலிண்டர் கொண்ட 649சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 63என்எம் ஆகும். 6 வேக கியர்பாக்சினை கொண்டுள்ளது.

மேலும் செயல்திறனை அதிகரிக்க அக்சிலரேட்டிங் ரேசியோ குறைக்கப்பட்டு உள்ளது. டார்க் 64என்எம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 350கிமீ ரேன்ஜ் கொண்ட பெட்ரோல் டேங்க்கை கொண்டுள்ளது. இந்த பைக் 20கிமீ மைலேஜை வழங்கும்.

இருவர் அமர்ந்து செல்லும் இருக்கை வசதி கொண்டதாக இருக்கும். மேலும், ஓட்டுபவருக்கு மிகச்சிறந்த ரைடிங் பொசிஷனை கொண்ட பைக்காக இருக்கிறது. தினசரி பயன்பாடு மற்றும் நீண்ட தூர பயணங்கள் விரும்புவோருக்கு சரியான சாய்ஸாக இருக்கும்.


முன்பக்கத்தில் 320மிமீ இரட்டை டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 240மிமீ ஒற்றை டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது. சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்தக்கூடிய இரட்டை சேனல் பூட்டுதலில்லாத (ஏபிஎஸ்) ஐ பெற்றுள்ளது.

Honda CBR650F தற்போது 41மிமீ (SDBV) போர்க்குகளை கொண்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறந்த பயண அனுபவத்தை கொடுக்கிறது.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும் பின்பக்கத்தில் 5 விதமான அட்ஜஸ்டபிள்( option) கொண்ட மோனோசாக் அப்சரினை பெற்றுள்ளது. மேலும் அலுமினிய ஆலாய் வீலை கொண்டுள்ளது.

Honda CBR 650F பற்றிய மேலதிக விபரங்கள் பின்வருமாறு.









Post a Comment

Previous Post Next Post

starclick add