HONDA CBR 250



கம்பீரமான தோற்றத்துடன் இளைஞர்களை கவரும் வகையில் CBR 250ஆர் பைக்கை honda நிறுவனம் வடிவமைத்துள்ளது.

ரைடிங் மற்றும் பாதுகாப்பு என அனைத்து அம்சங்களிலும் சிறப்பை வெளிப்படுத்தும் "Honda" நிறுவனம்

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து அதற்கேற்றவாறான பைக்குகள், ஸ்கூட்டர்கள், ஸ்போர்ட்ஸ் பைக்குகள், உள்ளிட்ட மொடல்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.



250ஆர்ஆர் பைக், புரோட்டோடைப் பைக் மொடலை போன்றே தோற்றமளிக்கிறது. இது ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் Honda நிறுவனம் உற்பத்தி செய்யும் பைக் ஆகும். இந்த பைக், ஏபிஎஸ் மற்றும் நொன்-ஏபிஎஸ் என 2 வெவ்வேறு வகைகளில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

முன்பக்க ஹெட்லைட் ஸ்கூப்புடன் பெட்ரோல் டேங்கை இணைத்து கவர்ச்சியாக இருப்பது மட்டுமல்லாது

பிரம்மாண்டமான வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட ஹோண்டா CBR 250R பைக் புதிய( body )கிராபிக்ஸ் மற்றும் 4 எஞ்சின்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிபிஆர் 250ஆர் பைக்கில் கிரே-ஒரஞ்ச் கலர், கிரே-பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய நான்கு நிறங்களில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.



சிபிஆர் 250ஆர்ஆர் பைக், Honda நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட (Throttle-by-Wire) அதிநவீன தொழில்நுட்பங்களும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பைக்கில் முன்புறத்தில் 296 மீமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த பைக்கில் டூயல்-சேனல் ஏபிஎஸ் பிரேக் அமைப்பும் இருக்கின்றது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டுள்ள இந்த பைக்கின் எடை 167 கிலோ ஆகும்.



இந்த பைக்கின் முன் பக்கத்தில் தலைகீழாக பொருத்தப்பட்ட ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது.

இது 250 சிசி லிக்யூடு கூலர் மற்றும் 4-ஸ்ட்ரோக் எஞ்சினுடன் வந்துள்ளது. நகர்ப்புற சாலைகள், நெடுஞ்சாலைகள் என எந்த சாலைகளில் ஓட்டினாலும் சிபிஆர்-250ஆர் சௌகரியமான ரைடிங் அனுபவத்தை கொடுக்கிறது. மேலும் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற பைக்காகவும் இருக்கிறது.


பிஎஸ்-3 எஞ்சினுக்கு பதிலாக மேம்படுத்தப்பட்ட 249.6 சிசி ஸ்டேஜ் 4 எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 26.5hp ஆற்றல் மற்றும் 22.9Nm இழுவைத் திறனை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Honda CBR 250 பற்றிய மேலதிக விபரங்கள் பின்வருமாறு.








Post a Comment

Previous Post Next Post

starclick add