ரோயல் என்ஃபீல்ட் நிறுவனம் உருவாகும் போது அது இந்திய நிறுவனமாக இல்லை, இன்னும் சொல்லப்போனால் அந்நிறுவனம் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பே அதற்கு ஐம்பதாண்டு கால வரலாறு இருக்கிறது. 

1901 முதல் 1967 வரை - இங்கிலாந்து.

 1901-ம் ஆண்டு ரோயல் என்ஃபீல்ட் தனது முதல் மோட்டார்சைக்கிளை தயாரித்தது. அது 2.5bhp பவர் தரும் இன்ஜினைக் கொண்டிருந்தது.
1916-ம் ஆண்டில் முதல் உலகப்போரில் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள்கள் பயன்படுத்தப்பட்டன. பிறகு, துப்பாக்கிப் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிளை என்ஃபீல்ட் அறிமுகம்செய்தது. அதன் பிறகு, 1931-ம் ஆண்டில்தான் புல்லட் அறிமுகமானது. அப்போதும் புல்லட் என்பது வெறும் சைக்கிள்தான். 1932-ம் ஆண்டில் முதன்முதலாக புல்லட் `பைக்' என்ற வடிவில் கம்பீரமாக அறிமுகமானது.

1 Comments

Post a Comment

Previous Post Next Post

starclick add